இந்தியா

தெலங்கானாவில் விவசாயிகளுக்காக ராகுல் பாதயாத்திரை

பிடிஐ

விவசாயிகளுக்கு ஆதரவாக தெலங்கானாவில் பாதயாத்திரையை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார் .

அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள கோரிட்டிக்கல் கிராமத்தில் இருந்து ராகுல் தனது 15 கி.மீ. பாதயாத்திரையை துவக்கினார்.

ராகுல் தனது பாதயாத்திரையின்போது லக்‌ஷ்மண்சந்தா, போட்டுப்பள்ளி, ரச்சாபூர், வைடால் ஆகிய பகுதிகளில் மேற்கொள்கிறார். அப்போது அவர் விவசாயிகள் பிரச்சினைகளை கேட்டறிகிறார்.

கோரிட்டிக்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெல்மா ராஜேஸ்வர் கடன் சுமை காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தனது பாதயாத்திரையின் ஒரு பகுதியாக அவரது வீட்டுக்குச் சென்றார் ராகுல் காந்தி.

தற்கொலை செய்து கொண்ட மற்றொரு விவசாயியின் வீட்டுக்கும் சென்ற ராகுல் காந்தி அவரது மனைவிக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கி நிதியுதவி செய்தார்.

இதுகுறித்து தெலங்கானா காங்கிரஸ் தலைவர் கூறும்போது, "ராகுல் காந்தியின் பாதயாத்திரை வேதனையில் இருக்கும் விவசாயிகள் மனதில் நமபிக்கையை விதைக்கும்" என்றார்.

SCROLL FOR NEXT