திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு, அதன் தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று பதவி பொறுப்பேற்றனர்.
திருப்பதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி தலைமையில் 18 பேர் கொண்ட புதிய அறங்காவலர் குழுவை ஆந்திர அரசு நியமனம் செய்தது. நேற்று திருமலையில் கோயில் வளாகத்தில் அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தியுடன் 14 பேர் பதவி பொறுப்பேற்றனர். லலித குமாரி, அனந்த லட்சுமி, பால வீராஞ்சநேய சாமி, சுதாகர் யாதவ், சாயண்ணா, ரமணா, சேகர், சுசித்ரா, சம்பத் ரவி நாராய ணன், ஹரிபிரசாத், அனந்தா ஆகியோர் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களாகவும் பதவி பொறுப்பேற்றனர். இவர்களுக்கு தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதே போன்று தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சாம்பசிவ ராவ், இந்த அறங்காவலர் குழுவின் சிறப்பு உறுப்பின ராகவும் பதவி பொறுப்பேற்றார்.