மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக் கப்படும் நபர் கைது செய்யப்பட்டார்.
அதிதுல் இஸ்லாம் பாபு என்ற அந்த நபருடன், மிலன் சர்கார் என்பவரும் கைதாகியுள்ளார். இவரும் மேற்கு வங்கத்தின் ரத்னாகட் அருகேயுள்ள சீலதா ரயில் நிலையம் அருகே நேற்றுமுன் தினம் இரவு கைது செய்யப்பட்டனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நாதியா மாவட்டத்தில் கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு 71 வயது கன்னியாஸ்திரி ஒரு கும்பலாக பலாத்காரம் செய்யப்பட்டார். இஸ்லாம் பாபு தலைமையிலான கும்பல்தான் இந்த கொடூரத்தில் ஈடுபட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே வழக்கில் ஷேக் சலீம், கோபால் சர்கார், மின்டு ஷேக் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.