காஷ்மீரில் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்ததற்கு காஷ்மீர் மகளிர் பிரிவினைவாத இயக்கமான துக்தாரன்-இ-மிலட் அமைப்பின் தலைவி அசியா அந்த்ரபி என்பவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அசியா இது குறித்து கூறும்போது, “காஷ்மீர் மீது இந்தியா திணிக்கும் பண்பாட்டு அராஜகத்தின் ஏஜெண்டாக சல்மான் கான் திகழ்கிறார்.
ஒழுக்க அளவுகோல்கள் அற்ற, இஸ்லாமியம் அல்லாத பல்வேறு விஷயங்களை சினிமா என்ற ஊடகம் மூலம் இந்தியா காஷ்மீரில் ஏற்றுமதி செய்யும் பண்பாட்டு அராஜகங்களுக்கு சல்மான் கான் போன்ற நடிகர்களை இந்தியா துணைக்கு அழைத்துக் கொள்கிறது.
இதனால் எதை இழந்தாலும் சரி, காஷ்மீரில் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கப் போவதில்லை” என்றார் அவர்.