பிஹார் மாநில முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி புது கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்தவர் மாஞ்சி. பிஹார் முதல்வராக இருந்து வந்த இவர், கட்சியின் தலைவரான நிதிஷ் குமாருடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தார். அதைத் தொடர்ந்து அவர் முதல்வர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
பின்னர் 'ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா' என்ற பெயரில் இயக்கம் தொடங்கினார். அந்த இயக்கத்தை மாஞ்சி அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார்.
இதுகுறித்து மாஞ்சி கூறும் போது, "விரைவில் எங்கள் கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்வோம். வரும் சட்ட மன்றத் தேர்தலில் 243 இடங்களி லும் நாங்கள் தனித்துப் போட்டி யிடுவோம்.
தற்போது ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியில் இருந்து நீக்கப் பட்டுள்ள பப்பு யாதவ் எங்களு டன் இணைய வந்தால், அவரை வரவேற்போம். நிதிஷ் குமாருடன் எந்த வகையான தொடர்பு வைத்திருக்கும் எந்த ஒரு கட்சியிடம் இருந்தும் விலகி நிற்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இந்தக் கட்சியின் மாநிலத் தலைவராக முன்னாள் அமைச்சர் சகுனி சவுத்ரி நியமிக்கப் பட்டுள்ளார்.