ஹுரியத் தலைவர் மிர்வைஸ் உமர் பரூக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து இளைஞர்கள் ஸ்ரீநகரில் இன்று நடத்திய ஆரப்பாட்டத்தில் பாகிஸ்தான் கொடியை ஏந்திச் சென்றுள்ளனர்.
நவ்ஹத்தா பகுதியில் மிர்வைஸ் உமர் பரூக் கைதை எதிர்த்து மசூதியில் தொழுகைகள் நடத்திய பிறகு இளைஞர்கள் பலர் கையில் பாகிஸ்தான் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படை வாகனங்கள் மீது கல்வீச்சு நடத்தினர். அதாவது ஆர்ப்பாட்ட பேரணி நவ்ஹத்தா சவுக் பகுதியை வந்தடைந்த பிறகு பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் கல்லெறி சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தனர். பிறகு கண்ணீர்புகை குண்டு வீசி கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர்.
இந்த பேரணியில் பல இளைஞர்கள் கையில் பாகிஸ்தான் கொடி இருந்தது.
மிர்வைஸ் உமர் பரூக் கடந்த புதனன்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.