உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது உடலில் தீவைத்து கட்டிப்பிடித்ததால் பலத்த காயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகர் கம்ருஸ்மா பாஜி, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தூர்தர்ஷனில் கடந்த திங்கள்கிழமை ஒளிபரப்பப்பட்ட நேரலை விவாத நிகழ்ச்சி, சுல்தான்பூரில் உள்ள பூங்கா ஒன்றில் நடைபெற்றது. இதில் கம்ருஸ்மா பாஜி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அப்போது துர்கேஷ் குமார் சிங் என்ற இளைஞர், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டதுடன், கம்ருஸ்மா பாஜியை நோக்கி நடந்து வந்து அவரை கட்டிப்பிடித்தார்.