மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப் பகுதி மற்றும் சிக்கிம் ஆகிய இடங்களில் சனிக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியிருந்தது.
நேபாளத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், 10.5 நொடிகள் வரை உணரப்பட்டதாக, இந்திய வானிலைத் துறை அதிகாரி கோபிநாத் ராஹா கூறியுள்ளார்.
இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பொருட்சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.