இந்தியா

தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார் ஜெகன் கட்சி எம்.பி.: மற்றொரு எம்.பி.யும் விரைவில் தாவ திட்டம்

என்.மகேஷ் குமார்

தேர்தல் முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஒருவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளிவந்தன. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் நந்தியால் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எஸ்.பி.ஒய். ரெட்டி, ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

இவருடன் கர்னூல் தொகுதியில் வெற்றிபெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. புட்டா ரேணுகாவின் கணவர் நீலகண்டமும் அக்கட்சியில் இணைந்தார். விரைவில் எம்.பி. புட்டா ரேணுகாவும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைவார் என அவரது கணவர் நீலகண்டம் தெரிவித்தார்.

இதுகுறித்து, எஸ்.பி.ஒய். ரெட்டி கூறுகையில், "எனது தொகுதி மக்களின் வளர்ச்சியே எனக்கு முக்கியம். என்னை கட்சியில் இருந்து நீக்கி மறுதேர்தல் நடத்தினால், முன்பைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்" என்றார்.

வெற்றி பெற்ற 9 எம்.பி க்களில், இரண்டு பேர் கட்சியை விட்டு விலகுவதால் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

SCROLL FOR NEXT