பெண்கள் மீதான வன்முறைகளுக்கு பெயர் பெற்ற உ.பி. மாநிலத்தில் பெண் ஒருவர் காதலன் முகத்தில் அமிலம் வீசியது பரபரப்பாகியுள்ளது.
ஜாம் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமிலம் வீசப்பட்ட அந்த நபர் பெயர் ராஜ்குமார் பால். இவருக்கு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ராஜ்குமாரை அந்தப் பெண் தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது.
ராஜ்குமார் பால் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அந்தப் பெண் ராஜ்குமார் மீது அமிலம் வீசி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.
இதில் படுகாயங்களுடன் ராஜ்குமார் பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உள்ளூர் மருத்துவமனையிலிருந்து பிறகு ராஜ்குமாரை வாரணாசி மருத்துவமனைக்கு மாற்றியதாக காவல்துறை உயரதிகாரி சந்தீப் சிங் தெரிவித்தார்.
இதனையடுத்து ராஜ்குமாரின் தாயார் அந்தப் பெண் மீது போலீஸில் புகார் செய்தார். தற்போது தலைமறைவான அந்தப் பெண்ணுக்கு போலீஸார் வலைவீசியுள்ளனர்.