அமேதி தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களை தாமதப்படுத்தி அங்குள்ள விவசாயிகள், ஏழைகளை நரேந்திர மோடி அரசு வஞ்சிக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி யுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் 3 நாட்கள் சுற்றுப் பயணத்தை நேற்று அவர் நிறைவு செய்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது சொந்த தொகுதி என்பதால் அமேதியை மோடி அரசு மோசமாக நடத்துகிறது. என்னை பழிவாங்க விரும் பினால் அதற்கு தயாராக இருக்கிறேன்.
இந்த தொகுதியைச் சேர்ந்த ஏழைகளும் விவசாயிகளும் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. அவர்களை ஏன் மத்திய அரசு வஞ்சிக்க வேண்டும்.
அமேதி தொகுதி நலத்திட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
அமேதி தொடர்ந்து புறக் கணிக்கப்படுகிறது. உணவுப் பூங்கா உள்ளிட்ட எல்லா மேம் பாட்டுத் திட்டங்களும் தாமதப் படுத்தப்படுகின்றன.
திட்டமிட்டு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். இனிமேல் தொகுதி மேம்பாட்டுப் பணி களுக்காக மக்களே களத்தில் இறங்கி போராடுவார்கள். இவ் வாறு அவர் தெரிவித்தார்.