சத்தீஸ்கர் மாநிலத்தின் தந்தேவாடா பகுதியில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 5 போலீஸார் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
மாவோயிஸ்ட் பயங்கரவாதி களின் தொடர் தாக்குதல்களால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. கடந்த 11-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் போலம்பள்ளி-பிட்மெல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிரடி படை வீரர்களை குறிவைத்து மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 போலீஸார் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்றுமுன்தினம் சத்தீஸ்கரின் கன்கெர் மாவட்டம் பர்பாஸ்பூர் பகுதியில் உள்ள இரும்புச் சுரங் கத்தில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த 17 லாரிகளை தீ வைத்து எரித்தனர். அதேநாளில் கன்கெர் மாவட்ட எல்லைப் பாதுகாப்பு படை முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார்.
4-வது தாக்குதல்
தந்தேவாடா மாவட்டம் குடிபடா கிராமத்தில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாப் புக்காக மாநில அரசின் ஆயுதப் படை போலீஸார் அனுப்பப்பட்டனர்.
அதன்படி கண்ணிவெடி பாது காப்பு கவச வாகனத்தில் 12 வீரர்கள் குடிபடா கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சக்திவாய்ந்த கண்ணி வெடியை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் கவச வாகனம் கவிழ்ந்தது. இந்தத் தாக்குதலில் 5 போலீஸார் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி. களூரி கூறியபோது, கண்ணி வெடி தாக்குதலை நடத்திய பயங்கர வாதிகளை தேடி வருகி றோம் என்று தெரிவித்தார். சத்தீஸ்கரில் 72 மணி நேரத்தில் அடுத்தடுத்து நான்கு தாக்குதல்களை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இதையடுத்து சத்தீஸ்கர் உட்பட மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 10 மாநிலங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.