இந்தியா

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் புதிய சட்டத்தை எதிர்த்து வழக்கு: விசாரணை நடத்த இருந்த நீதிபதி விலகல்

பிடிஐ

நீதிபதிகள் நியமனம் தொடர் பாகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி வழக்கில் இருந்து தன்னை விடு வித்து கொண்டார்.

உயர் நீதிமன்ற, உச்ச நீதி மன்ற நீதிபதிகள் நியமனத்தில், நீதிபதிகள் குழு முடிவெடுக்கும் கொலீஜியம் முறை கடந்த 1993-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தில் 5 மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவினரே, நீதிபதிகள் பணியிடமாற்றம், நியமனம் தொடர் பான முடிவுகளை எடுத்து வந்தனர். இந்நிலையில், தேசிய நீதிபதி கள் நியமன ஆணைய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்துவிட்டார்.

அதன்படி, நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை வகிப்பார். மேலும் ஆணையத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர், 2 முக்கிய பிரமுகர்கள், மத்திய சட்டத் துறை அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள்.

இதில் 2 முக்கிய பிரமுகர்களை, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு பரிந்துரைக்கும். ஆணையத்தில் இடம்பெறும் அந்த 2 முக்கிய பிரமுகர்கள் 3 ஆண்டுகள் பதவி வகிக்கும் வகை யில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையில், நீதிபதிகள் நியமன ஆணையம் மற்றும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட் அட்வகேட்ஸ் ஆன் ரெக் கார்ட் அசோசியேஷன், பார் அசோ சியேஷன் ஆப் இந்தியா மற்றும் வழக்கறிஞர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமை யிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருந்தது.

ஆனால், வழக்கை ஏ.ஆர்.தவே தலைமையில் விசாரணை நடத்த மனுதாரர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். தங்கள் மனு வில், ‘‘புதிய சட்டத்தின்படி அமைக் கப்பட்டுள்ள தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் உறுப்பின ராக நீதிபதி ஏ.ஆர்.தவே நியமிக்கப் பட்டுள்ளார். எனவே, இந்த வழக்கை அவர் விசாரிப்பது சரியாக இருக்காது’’ என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணை நேற்று தொடங்க இருந்த நிலையில், மனுதாரர்களின் ஆட்சேபத்தை அடுத்து, நீதிபதி தவே, வழக்கி லிருந்து விலகினார்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் கடந்த 13-ம் தேதியி லிருந்து செயல்பட தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT