செம்மர கடத்தலில் பல ஆண்டு களாக ஈடுபட்டு வந்த முக்கிய நப ரான சவுந்தர்ராஜனை நேற்று ஆந் திர மாநிலம் சித்தூர் போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
சவுந்தர்ராஜன் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த எல்லையன் என்பவரின் மகன். ஆந்திர போலீஸார் மேற்குவங்கம் சென்று அங்கு பதுங்கியிருந்த சவுந்தர்ராஜனை கைது செய்தனர். சவுந்தர்ராஜன் அங்கு பதுக்கிவைத்திருந்த ரூ.22 கோடி மதிப்புள்ள 11 டன் செம்மரங்களை 3 லாரிகள் மூலம் சித்தூருக்கு போலீஸார் கொண்டு வந்தனர்.
அவரை நேற்று சித்தூர் 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி ராகவேந்திரா, சவுந்தர்ராஜனை 14 நாட்கள் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் அவர் அடைக்கப்பட்டார். மீண்டும் அடுத்த மாதம் 7-ம் தேதி அவரை சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.