இந்தியா

மத்திய பிரதேசத்தில் ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் உயிரிழப்பு

அறிக்கை கேட்டு தேசிய சுகாதார இயக்கம் கடிதம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் சத்​தர்​பூர் மாவட்ட அரசு மருத்து​வ​மனையில் கடந்த 8 மாதங்​களில் 409 குழந்​தைகள் உயிரிழந்​துள்​ளன. இதைத் தொடர்ந்​து, மத்திய பிரதேசத்தின் சுகா​தா​ரத் துறை​யிடம் தேசிய சுகா​தார இயக்​கம் (என்​எச்​எம்) விரி​வான அறிக்கை கேட்டு கடிதம் எழு​தி​யுள்​ளது.

இதுகுறித்து சத்​தர்​பூர் மாவட்ட தலைமை மருத்​து​வர் ஆர்​.பி.குப்தா கூறுகை​யில், ‘‘கடந்த ஏப்​ரல் முதல் மருத்​து​வ​மனை​யில் இந்த உயி​ரிழப்பு ஏற்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக விசா​ரணைக்​குழு அமைக்​கப்​பட்​டது. அந்​தக் குழு தனது விசா​ரணையை ஏறக்​குறைய முடித்​து​விட்​டது. புதி​தாகப் பிறந்த குழந்​தைகளுக்​கான தீவிர சிகிச்​சைப் பிரிவு மற்​றும் பிரசவ அறை ஊழியர்​களிடம் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. அலட்​சி​ய​மாக இருந்த சில ஊழியர்​களை சிவில் சர்​ஜன் சமீபத்​தில் பணிநீக்​கம் செய்​துள்​ளார்’’ என்​றார்.

பிரசவ நடைமுறையில்.. இந்த மருத்​து​வ​மனை​யின் மருத்​து​வர்​கள் வட்​டாரம் கூறுகை​யில், ‘‘குழந்​தைகள் இறப்​புக்கு தொழில்​நுட்ப மற்​றும் சமூக காரணங்​களை மருத்​து​வ​மனை நிர்​வாகம் கூறி​ உள்​ளது. இதில் கிராமப்​புறங்​களில் இருந்து கர்ப்​பிணிப் பெண்களை மருத்​து​வ​மனைக்கு அழைத்து வரு​வ​தில் ஏற்​படும் தாமதம் முக்​கிய இடம் பெற்​றுள்​ளது.

சுகா​தார மையங்​களில் இருந்து சரி​யான நேரத்​தில் பரிந்​துரை செய்​யப்​ப​டாததும் காரண​மாகி உள்​ளது. இவையன்​றி, ஆம்​புலன்ஸ் பற்​றாக்​குறை, சில குழந்​தைகளுக்கு பிறவிக் குறை​பாடு​கள் இருப்​பதும் காரணங்​களாக காட்​டப்​பட்​டு உள்​ளது. மருத்​து​வ​மனைக்கு வந்த பிறகு அறுவை சிகிச்சை அல்​லது இயல்​பான பிரசவ நடை​முறை​யில் ஏற்​படும் தாமத​மும் ஒரு காரண​மாக குறிப்​பிடப்​படு​கிறது’’ என்று தெரி​வித்​தனர்.

இந்த உயி​ரிழப்​பு​களை குறைக்க ம.பி. அரசு பெரு​மள​வில் முயற்​சித்து வரு​கிறது. தற்​போது அதன் பலனாக முன்பு அதி​க​மாக இருந்த குழந்தை இறப்பு தற்​போது 6 சதவீதத்​திற்​கு குறைந்​துள்​ளது.

SCROLL FOR NEXT