பிரபல ஜவுளிக் கடையின் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததை அடுத்து முன்னச்சரிக்கையாக கேரளா எங்கும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் உள்ள ஜவுளி கடைகளின் உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்று கண்டறிய புதிய ஆபரேஷனை அம்மாநில காவல்துறை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனை ஆபரேஷன் டிக்னிட்டி (கண்ணியம்) என்ற பெயரில் நடத்தப்படுகிறது. முதல் நாளில் 15 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
இது குறித்து பெண்கள் பிரிவு காவல்துறை அதிகாரி லதா கூறும்போது, "முதற்கட்டமாக 15 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த முறைகேடும் கண்டுபிடிக்கப்படவில்லை. வரும் நாட்களில் தீடீர் சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.