இந்தியா

மோடியின் தாயார் ஆனந்தக் கண்ணீர்; மனைவி நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் குஜராத் தலைநகர் காந்திநகரில் தனது இளையமகன் பங்கஜ் மோடியுடன் வசிக்கிறார். உடல்நிலை காரணமாக டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு அவர் செல்லவில்லை.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை அவர் தொலைக்காட்சியில் கண்டு மகிழந்தார். மோடி பிரதமராக பதவியேற்றபோது அவரது தாயார் ஹிராபென் குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள தனது வீட்டில் தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்தார். மோடி பிரதமராக பதவியேற்றபோது ஹிராபென் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

மனைவி மகிழ்ச்சி

மோடியின் மனைவி யசோதா பென், மோஷினாவில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் பதவியேற்பு விழாவை பார்த்தார். தனது கணவர் பிரதமராகப் பதவியேற்றது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மோடி பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை விழாக்கோலம் பூண்டிருந்தது.

SCROLL FOR NEXT