இந்தியா

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சதித் திட்டமா?

பிடிஐ

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ள னர். இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது. இதனிடையே, இந்த இ-மெயிலை அனுப்பியவரை கண்டறிய போலீஸார் விசா ரணையை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிக்கு கடந்த மாதம் ஒரு மெயில் வந்ததாக எங்களுக்கு தகவல் கொடுத்தனர். அதில் ரிசர்வ் வங்கி ஆளுநரை கொன்றுவிடு வோம் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ்583847@ ஜிமெயில்.காம் என்ற முகவரியிலிருந்து இந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளது” என்றனர்.

எனினும் அந்த மெயிலில் உள்ள முழு விவரங்களையும் விரிவாக தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். இதுதொடர் பாக ரிசர்வ் வங்கி தரப்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி யின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, “ஆளுநர் ரகுராம் ராஜனும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் சென்றுள்ளனர். எனவே ராஜனின் கருத்தைப் பெற சிறிது அவகாசம் தேவைப்படுகிறது” என்றார்.

ராஜனை ஒழித்துக்கட்டுவோம் என்று அந்த இ-மெயிலில் எச்சரித்துள்ளதுடன், இதற்காக ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்வதற்கான ஒப்பந்தத் தொகைக்கும் கூடுதலாக ராஜன் பணம் கொடுத்தால், அவர் (கொலை செய்ய ஒப்புக் கொண்டவர்) மறுபரிசீலனை செய்வார் என்று மெயிலில் கூறியிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, நைஜீரியா, போலந்து, பெல்ஜியம், ஹாங்காங், உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தபடி இந்த ஜிமெயில் பயன்படுத்தப் பட்டுள்ளதாக முதற்கட்ட விசா ரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிரா கூடுதல் தலைமைச் செயலர் (உள்துறை) கே.பி.பக் ஷி கூறும் போது, “சில தினங்களுக்கு முன் இந்தக் கடிதம் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இதுகுறித்து மும்பை போலீஸின் செய்தித் தொடர்பாளர் தனஞ்செய குல்கர்னி கூறும்போது, “20 முதல் 25 நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநரின் அலுவலகத்துக்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. பதிலி சர்வர் மூலம் இந்த மெயில் அனுப் பப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டவர் கள்தான் இத்தகைய மிரட்டல் இமெயில் விடுப்பதில் தேர்ந்தவர் கள். அவர்களது செயலாக இது இருக்கக்கூடும். கூகுள் அதிகாரிகளிடம் இந்த மெயிலை அனுப்பியவர்கள் சம்பந்தமான விவரங்களை கோரியுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT