கர்நாடகாவிடமிருந்து தமிழ் நாடு தண்ணீர் கேட்கக் கூடாது, மாறாக கடல் நீரை குடிநீராக மாற்றும் முயற்சிகளை மேற்கொள்வதே நலம் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக எதிர்ப்பை குறைகூறியுள்ளார் சுவாமி.
ரெய்ச்சூரில் சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி, “கடல்நீரின் உப்பை நீக்கி சுத்தம் செய்து அதனை அனைத்துப் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் முறையை தமிழகம் தெரிவு செய்து கொள்ள வேண்டும். இஸ்ரேல் இதில் சிறந்தவர்கள். கடல் நீரின் உப்பை நீக்கும் 6 ஆலைகளை தமிழகம் உருவாக்கினால் போதுமானது. நிறைய நீராதாரம் கிடைத்துவிடும்.
காவிரி நதிநீர் தகராறு அரசியல் ஆயுதமாகப் பயன்பட்டு வருகிறது.” என்று அவர் கூறினார்.