இந்தியா

கர்நாடக எம்.பி.க்களுக்கு மாநிலங்களவையில் அதிமுக, திமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு

பிடிஐ

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்ட திட்டமிட்டுள்ள விவகாரத்தில் கர்நாடக மாநில எம்.பி.க்களுக்கு எதிராக அதிமுக, திமுக எம்.பி.க்கள் எப்போதும் இல்லாதவகையில் மாநிலங்களவையில் நேற்று ஓரணியாக செயல்பட்டனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே புதியஅணைகள் கட்ட கர்நாடகம் திட்டமிட்டுள்ள நிலையில் அதைத்தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

கர்நாடகத்தின் புதிய அணை கட்டும் திட்டம் பற்றி பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பிய அதிமுக உறுப்பினர் எஸ்.முத்துக்கருப்பன், “இதுபோன்ற எந்தத் திட்டத்துக்கும் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகமும் மத்திய அரசும் ஒப்புதல் தரக்கூடாது. காவிரி ஆணையம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக செயல்படாமல் தற்போதுள்ள நிலையையே கர்நாடக அரசு பராமரிக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் பி.கேஹரிபிரசாத் உள்ளிட்டோர் எழுந்து நின்று அதிமுக உறுப்பின ரின் பேச்சுக்கு ஆட்சேபம் தெரி வித்தனர். இதனால் இருதரப்பிலும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

அப்போது அதிமுக உறுப்பின ருடன் அவரது கட்சியின் பிற உறுப்பினர்களும், திமுகவின் உறுப் பினர்களும் ஓரணியில் திரண்டு கர்நாடக உறுப்பினர்களுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவை துணைத்தலைவர் பி.ஜே.குரியன் தலையிட்டு தமது கருத்துகளை தெரிவித்து நோட்டீஸ் தரும்படி கர்நாடக உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

SCROLL FOR NEXT