இந்தியா

காரை ஓட்டியது சல்மான் கான்: அரசு வழக்கறிஞர் திட்டவட்டம்

பிடிஐ

செப்டம்பர் 28, 2002-ல் நடந்த கார் விபத்து வழக்கில் காரை ஓட்டியது ஓட்டுநர் அசோக் சிங் அல்ல நடிகர் சல்மான் கான் என்று அரசுதரப்பு வழக்கறிஞர் விசாரணை நீதிமன்றத்தில் உறுதிபட தன் வாதத்தை முன்வைத்தார்.

சிறப்பு அரசு வழக்கறிஞர் பிரதீப் காரத் நீதிமன்றத்தில் தனது 30 பக்க அறிக்கையை முன் வைத்து வாதம் செய்த போது, “சல்மான் கான் காரின் டிரைவர் பகுதியிலிருந்து இறங்கியதை சாட்சிகள் நிரூபித்துள்ளன. நடிகரின் குடும்ப கார் டிரைவர் அசோக் சிங் காரை ஓட்டியதாக சாட்சியங்கள் ஒருவர் கூட தெரிவிக்கவில்லை.

மேலும், குறுக்கு விசாரணையின் போது காரில் 4-வது நபராக டிரைவர் அசோக் சிங் இருந்தது பற்றி ஏன் குற்றம் சாட்டபட்டோர் தரப்பு கேட்கவில்லை? அவர்களுக்கு குறுக்கு விசாரண செய்ய வாய்ப்பு கிடைத்தது ஆனால் ஏன் விசாரணை செய்யாமல் பேசாமல் இருந்தனர்? பிறகு சல்மான் தனது டிரைவர்தான் வண்டியை ஓட்டினார் என்ற பிறகு அசோக் சிங்கை குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். இது ஏன்?

அசோக் சிங் ஒரு பொய்யர், அவர் பொய்சாட்சி சொன்னதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

மேலும் விபத்தின் போது நடிகர் மது அருந்தியிருந்ததற்கான ரத்த சோதனை மாதிரி சாட்சியம் உள்ளது.” என்று வாதிட்டார்.

முந்தைய விசாரணையில் சல்மான் கான் காரின் டிரைவர் பகுதியிலிருந்து இறங்கியதற்குக் காரணம் விபத்து காரணமாக இடது புறம் இருந்த கதவு திறக்க முடியாத நிலைமையில் இருந்தது என்று சல்மான் வழக்கறிஞர் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT