இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இத்தாலி கடற் படை வீரர் மாசிமிலியானோ லட்டோர், மேலும் 3 மாதங்கள் சொந்த நாட்டில் தங்கியிருக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
இதுதொடர்பாக லட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.தவே மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவ காரணங்களுக் காக வரும் ஜூலை 15-ம் தேதி வரை இத்தாலியில் தங்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ள 2 வீரர்களும் விசா ரணையை எதிர்கொள்வதற்கு மீண்டும் இந்தியாவுக்கு வருவார் கள் என்று இத்தாலி தூதர் ஏற் கெனவே அளித்துள்ள உறுதி மொழியின் அடிப்படையில் நீதிபதி கள் இந்த உத்தரவை பிறப்பித்த னர்.
இத்தாலியின் கப்பலில் வந்த அந்நாட்டு கடற்படை வீரர்களான மாசிமிலியானோ லட்டோர், சால்வடோர் ஜிரோன் ஆகிய இரு வரும் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி கேரள கடற் கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 இந்திய மீனவர் களை சுட்டுக் கொன்றனர். இதை யடுத்து, இந்த 2 வீரர்களும் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவர்களில் லட்டோருக்கு மருத்துவ சிகிச்சைக்காக இத்தாலி செல்லவும் 4 மாதம் தங்கிக்கொள் ளவும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையடுத்து, மேலும் 3 மாதங்கள் இத்தாலியில் தங்கி யிருக்க லட்டோருக்கு உச்ச நீதி மன்றம் கடந்த ஜனவரி 14-ம் தேதி அனுமதி அளித்தது. வரும் 14-ம் தேதியுடன் இந்த காலக்கெடு முடிவதால், மேலும் சில மாதங் கள் தங்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.