இந்தியா

காவிரியில் புதிய அணை: மக்களவையில் தமிழக, கர்நாடக எம்.பி.க்கள் காரசார விவாதம்

பிடிஐ

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக மக்களவையில் தமிழக, கர்நாடக எம்.பி.க்களுக்கு இடையே நேற்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

மக்களவையில் அதிமுக எம்.பி. பி. வேணுகோபால் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். காவிரியில் இரண்டு அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இது காவிரி நடுவர் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிரானது என்று அவர் குற்றம் சாட்டினார்.

அப்போது கர்நாடக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து கோஷமிட்டனர். பதிலுக்கு தமிழக எம்.பி.க்களும் குரல் எழுப்பியதால் அவையில் அமளி ஏற்பட்டது.

கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்த குமார், தமிழக எம்.பி.க்களின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது அதிமுக எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று தமிழகத்தின் கோரிக் கையை வலியுறுத்தி குரல் எழுப்பினர். இந்த விவகாரத்தில் தமிழக, கர்நாடக எம்.பி.க்களுக்கு இடையே அவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT