இந்தியா

மெகபூபா முப்திக்கு மத்திய அமைச்சர் பதவி: அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்

செய்திப்பிரிவு

மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

இதில் காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி உள் ளிட்ட சிலர் புதிதாக சேர்க்கப்படு வார்கள் என்று தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி அரசு கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றது. அப்போது பிரதமருடன் 45 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

கடந்த நவம்பரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். அவர்களோடு சேர்த்து 20 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இப்போது மத்திய அமைச் சரவையில் 65 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் அமைச் சரவையை மேலும் விரிவாக்கம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

வரும் 8-ம் தேதி பிரதமர் வெளிநாட்டுப் பயணத்தை தொடங்குகிறார். அதற்கு முன்பாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி(பிடிபி) பாஜக கூட்டணி அரசு அண்மையில் பதவியேற்றது. கூட்டணி பேச்சு வார்த்தையின்போது பிடிபி தலைவர் மெகபூபா முப்திக்கு அமைச்சர் பதவி வழங்க உறுதி யளிக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. அதன்பேரில் அமைச்சரவை விரிவாக்கத்தில் மெகபூபாவுக்கு இடம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

தற்போதைய இணை அமைச் சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, முக்தர் அப்பாஸ் நக்வி, மனோஜ் சின்ஹா ஆகியோர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு ஆளுநராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SCROLL FOR NEXT