இந்தியா

உத்தரப் பிரதேச அமைச்சருக்கு கைது வாரன்ட்

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் காவலர் கள் பிணைக் கைதியாக சிறை பிடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் அம்மாநில அமைச்ச ருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு போதைப்பொருட்களை பதுக்கியது தொடர்பாக ஒரு கிராம தலைவரை கைது செய்த நன்பரா காவல் நிலைய போலீஸார் பிணைக் கைதிகளாக சிறைவைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் இப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் யாசீர் ஷா உட்பட 33 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஷாவுக்கு எதிராக பாரபங்கி தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் சர்வஜீத் சிங் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட்டை பிறப்பித்தார்.

SCROLL FOR NEXT