உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம் 
இந்தியா

காலியாக உள்ள 40 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்: மத்திய அரசு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகத்​தில் கலந்​தாய்வு முடிந்த பின்​னரும் காலி​யாக இருந்த 153 உயர் சிறப்பு மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​கள் அகில இந்​திய தொகுப்​புக்கு ஒப்​படைக்​கப்​பட்​டது. அந்த இடங்​கள் நிரம்பாமல் இருந்​தால் அதை நிரப்​பும் வகை​யில் கட் ஆஃப் மதிப்​பெண் சதவீதத்தை குறைத்து முழு​வது​மாக மீண்​டும் தமிழக அரசிடம் ஒப்​படைக்க வலி​யுறுத்தி தமிழ்​நாடு மருத்​துவ அதி​காரி​கள் சங்​கம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

அந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, அகில இந்​திய தொகுப்​புக்கு தமிழகம் வழங்​கிய உயர் சிறப்பு மருத்து​வப்​படிப்​புக்​கான 40 இடங்​கள் நிரம்​பாமல் உள்​ள​தாக மத்​திய அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்டது.

இதைதொடர்ந்து 40 உயர் சிறப்பு மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​களை நிரப்​புவதற்கு ஏது​வாக கட்​-ஆஃப் மதிப்​பெண் சதவீதத்தை குறைத்​து, அந்த இடங்​களை தமிழகத்​திடமே திரும்ப ஒப்​படைப்​பது குறித்து மத்​திய அரசு முடி​வெடுக்க உச்ச நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யிருந்​தது.

இந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் பி.எஸ்​.நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்​கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மத்​திய அரசு சார்​பில் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஐஸ்​வர்யா பட்டி ஆஜராகி, காலி​யாக உள்ள 40 இடங்​களை மீண்​டும் தமிழகத்​திடமே ஒப்​படைக்க முடி​வெடுத்​துள்​ள​தாக தெரி​வித்​தார்.

‘‘கட்​-ஆஃப் மதிப்​பெண் சதவீதம் குறைப்பு தொடர்​பாக முடிவு எடுக்க ஏன் தாமதம் ஏற்​படு​கிறது? ” என மத்​திய அரசு வழக்​கறிஞரிடம் நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பினர். அதற்கு பதிலளித்த கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஐஸ்​வர்யா பட்​டி, வரும் 7-ம் தேதிக்​குள் கட்​-ஆஃப் மதிப்​பெண் சதவீதம் குறைப்பு தொடர்​பாக முடி​வெடுக்​கப்​படும் என உறுதிஅளித்​தார்.

இதனை பதிவு செய்த நீதிப​திகள், உயர் சிறப்பு மருத்​து​வப்படிப்புக்​கான கட்​-ஆஃப் மதிப்பெண் சதவீதம் எவ்வளவு குறைக்​கப்​படுகிறது என்​பது குறித்து முடிவெடுத்து அதனை நீதி​மன்​றத்தில் தெரிவிக்க மத்​திய அரசுக்கு உத்​தர​விட்டு வழக்கை வரும்​ 8-ம்​ தேதி​க்​கு தள்​ளிவைத்​தனர்​.

SCROLL FOR NEXT