அமித் ஷா

 
இந்தியா

அசாமில் 3-வது முறை ஆட்சி: அமித் ஷா நம்பிக்கை

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அ​சாம் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) 90-க்​கும் அதி​க​மான இடங்​களில் வெற்றி பெற்​று, மூன்​றாவது முறை​யாக ஆட்​சி​யைத் தக்​கவைக்​கும் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார்.

தேர்​தல் நடை​பெறவுள்ள அசாம் மாநிலத்​துக்கு இரண்டு நாள் பயண​மாக நேற்று முன்​தினம் வருகை தந்த அவர், குவாஹாட்​டி​யில் பிரம்​மாண்​ட​மான சாலைப் பேரணி​யைத் தொடங்கி வைத்​தார். அதன் பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமித் ஷா கூறிய​தாவது : அசாம் மக்​கள் தொடர்ந்து மூன்​றாவது முறை​யாக என்​டிஏ அரசை தேர்ந்​தெடுப்​ப​தில் மிகுந்த ஆர்​வத்​துடன் உள்​ளனர். வரவிருக்​கும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் உறு​தி​யாக நாங்​கள் 90-க்​கும் அதி​க​மான தொகு​தி​களில் வெற்றி பெறு​வோம்.

          

பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலை​மையி​லான ஆட்​சி​யில் இம்​மாநிலத்​தில் மிகப்​பெரிய வளர்ச்​சிப் பணி​கள் நடை​பெற்​றுள்​ளன. உலகத்​தரம் வாய்ந்த உட்​கட்​டமைப்பு வசதி​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. ஒரு​காலத்​தில் அசாமில் நில​விய தீவிர​வாதம், குண்​டு​வெடிப்​பு​கள் மற்​றும் துப்​பாக்​கிச் சூடு சம்​பவங்​கள் முற்​றி​லும் ஒழிக்​கப்​பட்​டுள்​ளன.

தற்​போது மாநிலத்​தின் சுகா​தா​ரக் கட்​டமைப்பு மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. ஒட்​டுமொத்த வடகிழக்கு மாநிலங்​களின் கல்வி மற்​றும் சுகா​தார மைய​மாக அசாம் உரு​வெடுத்​துள்​ளது. இவ்​வாறு அமித் ஷா கூறி​னார். அசாம் மாநில சட்​டப்​பேர​வைக்கு வாக்​குப்​ப​திவு ஏப்​ரல் 9-ம் தேதி​யும், வாக்கு எண்​ணிக்கை மே 4-ம் தேதி​யும் நடை​பெறவுள்​ளன.

தற்​போதுள்ள சட்​டப்​பேர​வை​யில் பா.ஜ.க.வுக்கு 64 எம்​எல்ஏ. க்கள் உள்​ளனர். அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளாக அஸ்​ஸாம் கன பரிஷத் (9), ஐக்​கிய மக்​கள் லிபரல் கட்சி (7) மற்​றும் போடோலாந்து மக்​கள் முன்​னணி (3) ஆகியவை உள்​ளன.

எதிர் தரப்​பில் காங்​கிரஸ் கட்​சிக்கு 26 இடங்​களும், ஏஐயுடிஎஃப். கட்​சிக்கு 15 இடங்​களும் உள்​ளன. 2023 தொகுதி மறு​வரையறைக்​குப் பிறகு அசாமில் நடை​பெறும் முதல் சட்​டப்​பேர​வைத்​ தேர்​தல்​ இது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT