‘எனது மகள் சாரா திரைப் படத்தில் நடிப்பதாக வெளி யான தகவல்கள் வதந்தி’ என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் டெண் டுல்கரின் மகள் சாராவுக்கு தற்போது 17 வயதாகிறது. அவர் பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் அடுத்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்று அண்மையில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து டெண்டுல்கர் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், எனது மகள் திரைப்படத்தில் நடிப்பதாக வெளியான தகவல்கள் வதந்தி, அவர் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.