டெல்லியில் ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் தான் மிகவும் உடைந்து போயுள்ளதாக பிரதமர் மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கஜேந்திராவின் மரணம் தேசத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் இதனால் மிகவும் உடைந்து போயுள்ளோம், வருத்தமடைந்துள்ளோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
கடின உழைபாளியான விவசாயி எந்த ஒரு தருணத்திலும் தான் தனித்து விடப்பட்டதாக கருதக்கூடாது. இந்திய விவசாயிகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதில் நாமனைவரும் ஒருங்கிணைந்துள்ளோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி புதனன்று நிலச்சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்தியது இதில் மதியம் 2 மணியளவில் கஜேந்திர சிங் என்ற ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.