இந்தியா

திருப்பதி என்கவுன்ட்டர் சிபிஐ விசாரணை கோரும் மனு நிராகரிப்பு

பிடிஐ

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் செம்மரக் கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் குறித்து சிபிஐ விசாரணை அல்லது நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், “ஹைதராபாத் உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை இவ்விவகாரத்தை ஏற்கெனவே விசாரித்து வருகின்றன” எனத் தெரிவித்து விட்டனர்.

என்கவுன்ட்டரில் உயிரிழந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் ஒரு வழக்கறிஞரால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT