இந்தியா

என்ஜேஏசி சட்டத்தை எதிர்த்த வழக்கு: நீதிபதி கேஹர் தலைமையில் அரசியல் சாசன அமர்வு விசாரணை

செய்திப்பிரிவு

நீதிபதிகள் நியமனம் தொடர்பாகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வுக்கு நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமர்வு வரும் 21-ம் தேதி விசாரணையை தொடங்கும்.

இந்த வழக்கை நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று முன்தினம் விசாரணை எடுத்துக்கொள்ள இருந்த நிலையில், மனுதாரர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் நீதிபதி தவே திடீரென வழக்கிலிருந்து தன்னை விடுவித்து கொண்டார்.

புதிய சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் (என்ஜேஏசி) உறுப்பினராக நீதிபதி ஏ.ஆர்.தவே நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கை அவர் விசாரிப்பது சரியாக இருக்காது என்று மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT