இந்தியா

தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

தமிழ் புத்தாண்டையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மொழியில் தனது வாழ்த்தை தெரிவித்தார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியில், "தமிழ் நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் உங்களின் எண்ணங்கள் நிறைவேற மகிழ்ச்சி பொங்க நான் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவை அதிகம் பேர் ரீ ட்வீட் செய்தனர்.

அத்துடன் கேரளா, ஒடிசா, மேற்குவங்க மாநில மக்களுக்கும் அதே மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT