இந்தியா

போலி சான்றிதழ் விவகாரம்: தோமர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பிடிஐ

டெல்லி மாநில சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரை உடனடியாக பதவி நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜிதேந்தர் சிங் தோமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது என புகார் எழுந்துள்ளது.

எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீஸாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லி தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முற்பட்டனர். அப்போது போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் மீது போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர்.

இந்த போராட்டத்துக்கு டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் தலைமைதாங்கினார். டெல்லி அமைச்சரவையிலிருந்து தோமர் நீக்கப்படும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.,

அவர் மேலும் கூறியபோது, சட்ட அமைச்சர் நீக்கப்படும்வரை நாங்கள் போராட்டத்தை தொடருவோம். இந்த பிரச்சினையில் தார்மிகப் பொறுப்பு ஏற்று முதல்வர் கேஜ்ரிவால் பதவி விலக வேண்டும். தூய்மையான அரசியல் நடத்துவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி ஊழல்வாதிகளைக் கட்டிக் காக்கிறது என்றார்.

SCROLL FOR NEXT