இந்தியா

அணை கட்டுவோம்: சித்தராமையா அறிவிப்பு

செய்திப்பிரிவு

கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேகேதாட்டுவில் புதிதாக அணை கட்டுவதற்கான திட்ட வரைவு பணி நடந்து வருகிறது. மத்திய அரசின் வனத் துறை, நீர்வளத் துறைக்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பப்படும்.

தமிழகத்தின் எதிர்ப்பை சட்டப்பூர்வமாக சமாளித்து, மேகேதாட்டு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக எனது தலைமை யிலான அனைத்துக் கட்சி குழு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆதரவு கோருவோம். இதற்காக வரும் 22-ம்தேதி நேரம் ஒதுக்குமாறு மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகா ஆண்டு தோறும் தமிழகத்துக்கு நீர் பங்கீடு செய்து வருகிறது. உபரி நீரை பயன்படுத்த கர்நாடகத்துக்கு முழு உரிமை இருக்கிறது. எனவே தமிழக அரசியல் கட்சிகள் இவ்விவகாரத்தில் உள்நோக்கத்துடன் செயல்படக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT