இந்தியா

ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி விவகாரம்: சோனியாவை விமர்சித்து பாஜக பதிலடி

செய்திப்பிரிவு

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்குப் பதிலடியாக சோனியா காந்தியின் கல்வித் தகுதி குறித்து பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு மத்திய மனிதவளம் மற்றும் கல்வித்துறை ஒதுக்கப்பட் டுள்ளது. ஸ்மிருதி இரானிக்கு கேபினெட் அந்தஸ்தில் முக்கிய மான துறை ஒதுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் விமர்சித்திருந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான அஜய் மாக்கன், “மோடியின் அமைச்சரவையில் ஸ்மிருதி இரானிக்கு கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பட்டப்படிப்பு கூட படிக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

மகளிர் உரிமைகள் போராளி மது கிஷ்வார் இப்பிரச்சனையைக் கிளப்பியிருந்தார். தனது ட்விட்டர் தளத்தில் இது தொடர்பான கருத்துகளை அவர் தெரிவித்திருந்தார்.

கல்வித்துறையை தரம் உயர்த் தும் நடவடிக்கைகளை உடனடி யாகத் தொடங்க வேண்டும். கூரிய சிந்தனையுள்ள ஒருவர் இப்பணிக் குத் தேவை. மனிதவளத்துறை அமைச்சகம், பல்வேறு மாநில அமைச்சர்களைக் கையாள வேண் டியிருக்கும். ஏனெனில் கல்வி என் பது மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது. துணை வேந்தர்களை யும் கையாள வேண்டியிருக்கும். கல்வித்துறையில் இடதுசாரி, வலது சாரிச் சிந்தனையுள்ளவர்களுக்குத் தலைமை தாங்கி நுட்பமாகச் சமாளிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே அஜய் மாக்கனும் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்து விமர்சித்தது பாஜகவினரின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.

சரத் யாதவ் ஆதரவு

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், காங்கிரஸின் இக்கருத் துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப் துல்லாவும் மாக்கனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

உமாபாரதி

மத்திய அமைச்சர் உமாபாரதி, சோனியாவின் கல்வித் தகுதி குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சோனியா தலைமை வகித்தார். மேலும் பிரதமருக்கும் அவர் அறிவுறுத்தல்களைக் கொடுத் தார். ஆகவே, சோனியாவின் கல்வித் தகுதி என்ன என்பதை காங்கிரஸார் விளக்க வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சோனியா வீட்டு வாசலில் கை கட்டி நின்றது. எனவே, சோனியாவின் கல்வித்தகுதி என்ன எனக் கூற வேண்டும். சோனியா காந்தியின் கல்விச் சான்றிதழ்களை காங்கிரஸார் காட்ட வேண்டும். அவர் எங்கு எப்படிப் படித்தார் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே ஸ்மிருதி இரானியைப் பற்றி விமர்சிக்கலாம்.

சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், எப்படிப் பணி புரிய வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

என உமா பாரதி கேள்வி யெழுப்பியுள்ளார்.

சந்தோஷ் கங்வார்

மற்றொரு மத்திய ஜவுளி மற் றும் நீர்வளத்துறை அமைச்சரான சந்தோஷ் கங்கவார், காங்கிரஸ் சோனியாவால் எப்படி வழிநடத்தப் பட்டது? சோனியாவின் கல்வித் தகுதி என்ன என்று காங்கிரஸாரைப் பார்த்துக் கேட்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

முக்தர் அப்பாஸ் நக்வி

பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், “காங்கிரஸ்காரர்கள் தங்களது ஆணவப் போக்கைக் கைவிட வேண்டும். அக்கட்சி தோற்றதற்கு அவர்களின் ஆணவம்தான் காரணம். ஆனாலும், இன்னும் அவர்கள் அதைக் கைவிடவில்லை. பாஜகவுக்கு எதிராகக் குறைகூறுவதை விட்டுவிட்டு, மக்களின் தீர்ப்புக்கு மரியாதை அளிக்க வேண்டும்” என்றார்.

திவாரி கருத்து

அதேசமயம் காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான மணீஷ் திவாரி, பாஜக அரசின் மீதான விமர்சனம் கொள்கை அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். தனி நபரை மையப் படுத்தி இருக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT