இந்தியா

ஆப்கன் அதிபரை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

பிடிஐ

இந்தியா வந்துள்ள ஆப்கன் அதிபர் கனியை, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில், ஆப்கன் அதிபர் சிறப்பு விருந்தினராக தங்கியுள்ளார்.

முன்னதாக, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் கனியை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா வரவேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியை, ஹைதராபாத் இல்லத்தில் ஆப்கன் அதிபர் கனி சந்திக்கவுள்ளார். பின்னர் ஆப்கன் அதிபரை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், மனோகர் பரிக்கர், ஜெ.பி.நட்டா ஆகியோர் சந்திக்கின்றனர். குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரியும், ஆப்கன் அதிபரை சந்திக்கிறார்.

SCROLL FOR NEXT