இந்தியா

சரத்பவார் கட்சியில் சிவசேனை செய்தித் தொடர்பாளர் இணைகிறார்?

செய்திப்பிரிவு

சிவசேனை செய்தித் தொடர்பாளர் ராகுல் நர்வேகர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிர சட்டமேலவையில் 9 காலியிடங்களுக்கான தேர்தல் மார்ச் 20-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 2 இடங்களுக்கு சிவசேனை சார்பில் ராகுல் நர்வேகர் உள்ளிட்ட இருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் வேட்பு மனுவை வாபஸ் பெறுமாறு ராகுல் நர்வேகருக்கு சிவசேனை கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.

2 வேட்பாளர்களும் வெற்றிபெற சிவசேனைக்கு சட்டமன்றத்தில் போதிய பலம் இல்லாதது, நிதின் கட்கரி - ராஜ்தாக்கரே சந்திப்பால் பாஜகவின் ஆதரவை சிவசேனை கேட்க விரும்பாதது இதற்கு காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில் வேட்பு மனு வாபஸ் விவகாரத்தில் ராகுல் நர்வேகர் அதிருப்தி அடைந்தார். “இதுகுறித்து கட்சி விளக்கம் அளிக்கவேண்டும்” என்று அவர் கேட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் சரத் பவாரை சந்தித்துப் பேசியிருப்பது அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி யில் இணையலாம் என்று கூறப்படு கிறது. நர்வேகர், தேசியவாத காங்கி ரஸ் கட்சித் தலைவர் ராமராஜே நாயக் நிம்பல்கரின் மருமகன் என் பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT