அசாமில் போடா தீவிரவாதிகளால் 30-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பாஜக மற்றும் நரேந்திர மோடியின் வகுப்புவாத அரசியலே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மீனம் அப்சல் கூறுகையில், “பாஜகவின் செல்வாக்கு சரியும்போதெல்லாம், அவர்களின் பேச்சில் வகுப்பு வாத நெடி அதிகரிக்கும். அசாமில் வாக்காளர்களை கவருவதற்காக மோடியின் முயற்சி இந்த வகையில்தான் இருந்தது. பிஹார், உ.பி.யில் சோதித்துப் பார்த்ததை அவர்கள் அசாமிலும் செய்துள் ளனர்” என்றார்.