இந்தியா

போலி பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரம்: டெல்லி சட்ட அமைச்சரை நீக்க கோரி பாஜக போராட்டம்

செய்திப்பிரிவு

டெல்லி மாநில சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரை பதவி நீக்க வலியுறுத்தி, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜிதேந்தர் சிங் தோமரின் பட்டப் படிப்பு சான்றிதழ் போலியானது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிஹார் பல்கலைக்கழகம் தெரி வித்துள்ளது. இந்நிலையில் அவரை கேஜ்ரிவால் பதவி நீக்கவேண்டும் என வலியுறுத்தி, பாஜக டெல்லி மாநிலத் தலைவர் சதீஷ் உபாத் யாய தலைமையில் இந்தப் போராட் டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, டெல்லி ஆம் ஆத்மி கட்சி அரசு மற்றும் தோமருக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.

சதீஷ் உபாத்யாய பேசும்போது, “மக்களை டெல்லி அரசு முட்டாளாக்கி விட்டது. போலி பட்டம் பெற்றவர் அமைச்சர் பதவி வகிக்கிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் சட்டரீதியி லான நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

SCROLL FOR NEXT