பஞ்சாப் மாநில விவசாயிகளின் நிலையை அறிந்து கொள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று அந்த மாநிலத்துக்கு ரயிலில் சென்றார்.
டெல்லி ரயில் நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இதை எதிர்த்து காங்கிரஸ் போராடும். இப்போது பஞ்சாப் மாநில விவசாயிகளின் நிலையை அறிந்து கொள்வதற்காக அந்த மாநிலத்துக்குச் செல்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, ஷகீல் அகமது ஆகியோரும் ராகுலுடன் ரயிலில் பஞ்சாப் சென்றுள்ளனர்.