இந்தியா

உ.பி.யில் மழையால் சேதம்: ரூ.1,000 கோடி நிவாரண உதவி அளிக்க மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

பிடிஐ

உத்தரப் பிரதேசத்தில் 55 மாவட் டங்களில் மழை மற்றும் பனிப்பொழி வால் ஏற்பட்ட சேதத்தை பேரிடர் என அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், விவசாயிகளுக்கு நிவாரண உதவி அளிக்க மத்திய அரசு ரூ. 1,000 கோடி நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் பருவம் தப்பிப் பெய்த மழை மற்றும் பனிப்பொழிவு காரண மாக அதிக பல நூறு கோடி மதிப்புள்ள பயிர்கள் சேதமடைந் துள்ளன.

இந்நிலையில் விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்கப் படும் என மாநில அரசு அறிவித் துள்ளது. மேலும், அகால மரண மடைந்த விவசாயிகளின் குடும்பத் துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுவதற்காக முக்கிய அரசு அதிகாரிகளின் விடுப்பை முதல்வர் அகிலேஷ் ரத்து செய்துள் ளார்.

மழை காரணமாக 44 மாவட் டங்களில் 50 சதவீதமும், 11 மாவட்டங்களில் 33 சதவீதமும் பயிர்கள் சேதமடைந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT