காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணைகள் கட்டுவதற்கு அனுமதிக்க கோரி, கர்நாடக அனைத்துக்கட்சி தலைவர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றனர்.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டபடி குடிநீர் தேவைக் காகவும், மின்சார தேவைக் காகவும் மேகேதாட் டுவில் அணை கட்டப்படும். இது தொடர்பாக கர்நாடக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் குழப்பம் அடைய வேண்டாம். இத்திட்டத்தை செயல்படுத் துவதில் கர்நாடக அரசு உறுதி யாக இருக்கிறது. எனவே அரசு மீது மக்கள் சந்தேகப்பட வேண் டாம்.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து தேவையற்ற பிரச்சினைகளை கிளப்பி வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். மேகேதாட்டு திட்டங்களை நிறைவேற்ற கர்நாடகத்துக்கு சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை. எனது தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு வியாழக்கிழமை பிரதமரை சந்தித்து பேசிய பிறகு முடிவு கிடைக்கும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.