ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலின் சர்ச்சைக் குரிய பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக சார்பில் தொலைக்காட்சி நடிகை ஸ்மிருதி இரானி, ஆம் ஆத்மி சார்பில் அதன் மூத்த தலை வர் குமார் விஸ்வாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி குமார் விஸ்வாஸுக்கு ஆதரவாக அமேதியில் கேஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது, காங்கிரஸ், பாஜக வுக்கு ஆதரவாக ஒருவர் வாக்களித் தால் அது கடவுள் மற்றும் இந்த நாட்டுக்கு இழைக்கும் துரோகம்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. மே 13-ம் தேதிக்குள் அவர் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் கெடு விதிக்கப் பட்டுள்ளது.