‘‘வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி கொள்ள கடவுளையோ அரசாங்கத் தையோ நம்பிக் கொண்டிருக் காதீர்கள்’’ என்று விவசாயி களுக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவுரை வழங்கி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் உள்ள விஞ்ஞான் மையத்தில், வேளாண் தொழில்நுட்ப கண்காட்சியை, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயி கள் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் கட்கரி பேசியதாவது:
உங்கள் (விவசாயிகள்) வாழ்க் கையை மேம்படுத்திக் கொள்ள நீங்கள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். கடவுளையோ அரசாங்கத்தையோ சார்ந்திருக்க வேண்டாம்.
வேளாண் உற்பத்தியில் வெற்றி பெற, தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனநிலையில் மாற்றம் வந்தால், உங்கள் வாழ்க்கையிலும் மாற்றம் வரும். உங்கள் வாழ்க்கையை வடிவமைக்க வேண்டியது உங்கள் கைகளில்தான் உள்ளது.
இப்போதுள்ள நிலையை மாற்றி அமைக்க உங்களாலேயே முடியும். அதற்குப் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தொழில் முனைவோராக மாறுங் கள். இந்த விதர்பா பகுதியில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவே, இந்த வேளாண் கண்காட்சி நடத்தப் படுகிறது.
இங்குள்ள நிபுணர்கள் மூலம் புதிய தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.
உங்கள் மனநிலையை மாற்றி கொண்டு, நிபுணர்களிடம் தொழில்நுட்ப பயிற்சி பெற்றால், விவசாயத்தில் புதிய மாற்றம் ஏற்படும்.
உங்கள் வாழ்க்கைத் தரமும் உயரும். பயிர்கள் சேதம் அடையும்போது மனமுடைந்து போகாதீர்கள். பயிர்களைப் பற்றி ஆராய்ந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். அதற்கேற்ப பயிர் முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.
இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.