காஷ்மீரில் நடத்தியதுபோல டெல்லியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி இருப்பதாக டெல்லி போலீஸுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை யடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
கடந்த மார்ச் 19, 20-ம் தேதி இரவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டம் வழியாக ஊடு ருவிய 4 தீவிரவாதிகள் இரண்டு குழுக்களாக பிரிந்தனர். இதில் ஒரு குழுவினர் ஒரு காவல் நிலை யத்தின் மீது தாக்குதல் நடத்தி யதில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேர் பலியாயினர். பதில் தாக்குத லில் 2 தீவிரவாதிகளும் கொல்லப் பட்டனர். இதுபோல மற்றொரு குழுவினரின் தாக்குதல் முயற்சியை ராணுவம் முறியடித்தது. இதில் 2 தீவிரவாதிகளும் கொல்லப் பட்டனர். இவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவங்களில் கொல்லப் பட்ட தீவிரவாதிகளில் ஒருவரிட மிருந்து கைப்பற்றப்பட்ட துண்டு தாளில், “அடுத்தபடியாக டெல்லி யில் சந்திக்கிறோம்” என்று எழுதப் பட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து டெல்லி போலீஸுக்கு மத்திய உளவுத்துறை அனுப்பியுள்ள குறிப்பில், ‘காஷ்மீரில் நடத்தியது போல டெல்லியிலும் தற்கொலைப் படை தாக்குதலை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, போலீஸார் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப் புடனும் இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப் படுத்தி உள்ளனர். டெல்லியின் நுழைவு மற்றும் வெளியேறும் வழி களில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.