இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

பிடிஐ

காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்தத்தை நேற்று மீறியது.

காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜம்முவின் ஆர்.எஸ்.புரா மற்றும் நவாபிந்த் எல்லைச் சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நேற்று சரமாரியாக சுட்டனர். அவர்களுக்கு இந்திய ராணுவ தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்திய தரப்பில் உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT