ஹைதராபாத் நகரில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் 1 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன.
ஹைதராபாத்தை அடுத்துள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் தொர்ரூரு கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணையில் கடந்த ஒரு வாரத்தில் 20 ஆயிரம் கோழிகள் நோய் தாக்கி இறந்தன.
கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக் கப்பட்டு கோழிகள் இறந்தது தெரியவந்தது. இந்த பண்ணையில் சுமார் 1 லட்சம் கோழிகள் உள்ளன.
சமீபத்தில் இறந்த கோழி களை பண்ணையின் பின்புறம் வீசியதால், அவை மழை யில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
அங்குள்ள மற்ற கோழி களுக்கும் பறவைக் காய்ச்சல் நோய் பரவியதாக விசாரணையில் தெரியவந்தது.
பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க அந்த பண்ணையில் இருந்த சுமார் 1 லட்சம் கோழிகளை உடனடியாக அழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோழிகள் நேற்று கொல்லப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹைதரா பாத், மேதக், நல்கொண்டா ஆகிய மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதா என சுகாதார துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். இதன் மூலம் ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இறைச்சிக் கோழியின் விலை குறைந்துள்ளது.