இந்தியா

பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்குதல்: சத்தீஸ்கரில் கட்டப் பஞ்சாயத்து கொடூரம்

செய்திப்பிரிவு

பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய கொடூரமான தண்டனை வழங்கிய சம்பவம் சத்தீஸ்கர் கட்டப் பஞ்சாயத்தில் நிகழ்ந்துள்ளது.

மேலும் அப்பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம் கட்ட வேண் டும் இல்லையென்றால் குடும்பத் துடன் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார் என்று கட்டப் பஞ்சாயத்து நடத்தியவர்கள் கூறி யுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது 35. அவர் பழங்குடியின ஆசிரியை. இந்த கொடூர சம்பவம் ஏப்ரல் 19-ம் தேதி நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் அளித்துள் ளார். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததை அடுத்து அவர் மனித உரிமை ஆணையத்தையும், மகளிர் ஆணையத்தையும் அணு கினார். இதையடுத்த அவருக்கு நிகழ்ந்த மோசமான சம்பவம் வெளிச் சத்துக்கு வந்துள்ளது.

சத்தீஸ்கரின் ஜஸ்பூர் மாவட்டம் பந்லகோன் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் தனது மருமகனை வீட்டில் தங்கவைத்தார் என்ற குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஜோடிக்கு ஏற்கெனவே திருமணம் பேச்சுவார்த்தை நடை பெற்று வரும் நிலையில் அப்பெண் எனது மருமகனை சந்தித்துப் பேச எனது வீட்டுக்கு வந்தார் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

ஆனால் அந்த இளம் பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட் படுத்தப்பட்டார். அதற்கு அந்த ஆசிரியை உதவியாக இருந்துள் ளார் என்று கட்டப் பஞ்சாயத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கட்டப் பஞ்சாயத்தில் கூடியிருந்த அனைவரும் அப்பெண்ணை அடித்து உதைக்கலாம் என்று தீ்ர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை கடுமை யாகத் தாக்கியதுடன், அவரை நிர்வாணப்படுத்தவும் செய்துள்ள னர். இந்த சம்பவத்தின்போது தான் அணிந்திருந்த நகைகளையும் அவர்கள் பறித்துக் கொண்டதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாயத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தாவிட்டால், அப்பெண்ணும் குடும்பத்தினரும் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப் படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணைய செயலாளர் ஜெக்ராணி இகா கூறியது: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து உரிய சட்டப்பிரிவு களில் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென காவல் துறைக்கு கடிதம் எழுதி யுள்ளோம். காவல் துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகையில், அப்பெண் தாக்கப்பட்டது உண்மை தான். ஆனால் அவரை நிர்வாணப் படுத்தவில்லை. அடி விழும்போது ஆடைகள் கிழிந்துவிட்டன என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர் பாக இருவர் கைது செய்யப் பட்டு அவர்கள் ஜாமீனில் விடு விக்கப்பட்டதாக உள்ளூர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT