பெண்களின் ஆடைக் கட்டுப்பாடு பற்றிய தனது மனைவி பேச்சின் சர்ச்சை அடங்குவதற்குள் கோவா அமைச்சரும் சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.
உடை அணிவதில் மேற்கத்திய கலாச்சாரத்துக்கு பெண்கள் மாறியதுதான் பலாத்கார குற்றங்கள் அதிகரித்ததற்குக் காரணம் என பேசி சர்ச்சைக்குள்ளானார் கோவா அமைச்சர் தீபக தவாலிகரின் மனைவி லதா. அவரது பேச்சு எழுப்பிய சர்ச்சை அடங்குவதற்குள் தீபக் தவால்கர் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மேற்கத்திய கலாச்சாரங்கள் ஊடுருவம் வரை பாலியல் பலாத்காரங்கள் குறைவாகவே இருந்துள்ளன. என் மனைவி இதுநாள் வரை சேலை மட்டுமே அணிகிறார். எங்கு சென்றாலும் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்கிறார். இத்தனை ஆண்டு காலத்தில் அவரை யாரும் கேலி செய்ததில்லை. இதைத் தான் அவரும் விளக்க முயற்சித்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தீபக் தவாலிகார் கோவா மாநில தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மோடி தலைமையில் இந்துஸ்தான் அமைய வேண்டும் என கூறி சர்ச்சைக்குள்ளாகினார் என்பது கவனிக்கத்தக்கது.