பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்துகிறோம் என்று ஜமாத்-உத்- தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையது தெரிவித்துள்ளார்.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவன தலைவர்களில் ஒருவரான அவர் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
சர்வதேச நாடுகளின் நிர்ப் பந்தம் காரணமாக அவரின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு பாகிஸ் தான் அரசு தடை விதித்தது. எனினும் ஹபீஸ் சையது மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இந்நிலையில் தனி யார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப் பதாவது:
காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்கள் சுதந்திர வேட்கை கொண் டுள்ளனர். அவர்கள் சுதந்திரம் வேண்டி புனிதப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் முயற் சிக்கு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி செய்து வருகி றது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் தீவிர வாதிகளின் பின்னணியில் பாகிஸ் தான் ராணுவம் செயல்படுகிறது என்று மத்திய அரசு நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகிறது.
இதனை ஹபீஸ் சையது உறுதி செய்துள்ளார்.பாகிஸ் தானின் இரட்டை வேடத் தையும் அம்பலப்படுத்தியுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.